ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் கோவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு..!

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் வகைகள் அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஓஎஸ்ஆர் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களையும் பார்வையிட்டார்.


கோவை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி மணிமண்டபம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 6.78-லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் வகைகள் அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ஓஎஸ்ஆர் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களையும் பார்வையிட்டார்.



அதனை அடுத்து, எஸ் எஸ் குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பதிவேடு நிலம் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அனைத்து விதமான பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், எஸ் எஸ் குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் சாலை பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் பொழுது சர்க்கார் சாமகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி மற்றும் அனிதா ஒன்றிய பொறியாளர் சந்திரகலா மண்டல துணை வட்டார அலுவலர் அம்மு உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...