'ஆடி அமாவாசை' - ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வெள்ளிக்கிழமைகள் அமாவாசை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி மாதம் முதல் அமாவாசையை முன்னிட்டு, மாசாணி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



நேற்று இரவு முதலே கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. கோயில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் காலை வரை காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...