இடம் வாங்குவதற்கும், விற்பதற்கும், தடையில்லா சான்று கூறும் நடைமுறை நீக்க வேண்டும்: பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அம்பராம்பாளையம் பொதுமக்கள் மனு..!

அம்பராம்பாளையம் பகுதியில் இடம் வாங்குவதற்கும், விற்பதற்கும், சார்பதிவாளர் அலுவலகத்தில், தடையில்லா சான்று பெறும் நடைமுறையை நீக்க வேண்டும் என்று கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியில் அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.


கோவை: இடம் வாங்குவதற்கும், விற்பதற்கும், தடையில்லா சான்று கூறும் நடைமுறை நீக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அம்பராம்பாளையம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்தில் இடம் வாங்குவதற்கும், விற்பதற்கும், சார்பதிவாளர் அலுவலகத்தில், தடையில்லா சான்று பெறும் நடைமுறையை நீக்க வேண்டும் என்று கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியில் அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சகர்பானு பைசல் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமத்தில் அரசு வழங்கிய குடியிருப்பு பட்டாவில் உள்ள இடத்தை உரிமையாளர்கள் விற்றாலும், அந்த இடத்தை தனிநபர் வாங்கினாலும் எவ்வித தடையும் இல்லாமல் பத்திரப்பதிவு செய்து கொண்டு இருந்தோம். கடந்த இரண்டு மாதங்களாக கிராமத்தில் உள்ள பட்டாக்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

மேலும், வங்கிகளில் வீட்டு மனை கடன் பெறவும் முடியாத சூழ்நிலை உள்ளது. சார்பதிவாளர் அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டால், இங்கு வகுப்புவாரி இடம் உள்ளது. எனவே பட்டாக்களை பதிவு செய்ய வகுப்பு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்று வருமாறு தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி, தற்போது உள்ள இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று, மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...