தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 42-பேர் திடீர் மாற்றம்..!

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் கோட்ட பொறியாளர்களில், 42-அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்காக, வெவ்வேறு நகரங்களுக்கும், பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


கோவை:நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் கோட்ட பொறியாளர்களில், 42-அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்காக, வெவ்வேறு நகரங்களுக்கும், பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் கோட்ட பொறியாளராக பணியாற்றிய சமுத்திரக்கனி, மாநில நெடுஞ்சாலைத் துறையில் கோவையில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களுக்குக் கோட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தஞ்சாவூரில் துணை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் கோட்ட பொறியாளராக இருந்த மாதேஸ்வரன், ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, வேலூரில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு பிரிவில் பணிபுரிந்த சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் கட்டுமானம், பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு பிரிவில் பணியாற்றிய செல்வக்குமார், கோபிசெட்டிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக, தாராபுரத்தில் பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...