செங்கல் சூளைகளால் நடத்தப்பட்ட மண் கொள்ளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அறிக்கை அளிக்குமாறு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, கோவை ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, கள ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.
கோவை: கோவை செங்கல் சூளைகள் தொடர்பான வழக்கு, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது; மண் கொள்ளை, சேத மதிப்பீடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை, ஆக., 29-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோவை செங்கல் சூளைகள் தொடர்பான வழக்கு, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது; மண் கொள்ளை, சேத மதிப்பீடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை, ஆக., 29-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஐந்து கிராம ஊராட்சிப் பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வந்தன. அரசு மற்றும் பட்டா நிலங்களில், அரசின் விதிகளை மீறி, வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆதரவுடன் 50 அடி, 100 அடி என்ற அளவுக்கு மண் அள்ளப்பட்டது.
இந்த கிராமங்களின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாயினர். மண் கொள்ளை, விதிமீறல்கள், மக்கள் பாதிப்பு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், சுயமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் காரணமாக, இதே செங்கல் சூளைகள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் நடந்த பல்வேறு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாய உத்தரவுகளின்படி, 197 செங்கல் சூளைகளும் மூடி 'சீல்' வைக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த செங்கல் சூளைகளால் நடத்தப்பட்ட மண் கொள்ளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அறிக்கை அளிக்குமாறு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்படி, கோவை ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, கள ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் நேற்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. வரும் ஆக.,29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அப்போது, அபராதம் தொடர்பான அறிக்கை பற்றி விசாரிக்கப்படும் என்பதால், இவ்வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.