கோவை வால்பாறை பகுதியில் மழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம்..!

மழைநீர் அரிப்பால் சுவர் இடிந்து விழுந்ததில், யாருக்கும் பாதிப்பு இல்லை. சுவர் இடிந்து கால்வாயில் விழுந்ததில் தண்ணீர் செல்லாமல் துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை பகுதியில் மழையால் தடுப்பு சுவர்இடிந்து விழுந்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மதியம் முதல் மழை கனமழையாக பெய்து வந்தது.

இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து காணப்பட்டது. வால்பாறை அண்ணா நகர் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு ராஜா என்பவரின் வீட்டு அருகே பிரதான கால்வாய் மழைநீர் அரிப்பால் சுவர் இடிந்து விழுந்தது. இதில், யாருக்கும் பாதிப்புஇல்லை. சுவர் இடிந்து கால்வாயில் விழுந்ததால் தண்ணீர் செல்லாமல்துர்நாற்றம் வீசியதுஇதனால் அருகில் உள்ள மக்கள் சிரமப்பட்டனர்.

அப்பகுதியில், உள்ள பத்தாவதுவார்டு உறுப்பினர் காமாட்சி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவசர நடவடிக்கையாகத் தடுப்புச் சுவரைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...