கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா: இயக்குனர் பாரதிராஜா, நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசளித்தனர்

ஆறாவது நாளான இன்று, கொடிசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி மற்றும் சிறுகதை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருதினர்களாக நடிகர் தாமு மற்றும் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 6-வது புத்தக திருவிழா கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கடந்த 22ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆறாவது நாளான இன்று, கொடிசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி மற்றும் சிறுகதை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருதினர்களாக நடிகர் தாமு மற்றும் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கட்டுரை போட்டியில் 4300 கட்டுரைகள் மாணவர்கள் எழுதி சமர்பித்திருந்த நிலையில், சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவருடைய உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, விழாவுக்கு வந்தவர்களை புத்தக திருவிழா தலைவர் விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சீடரும், நடிகருமான தாமு கலந்து கொண்டு மாணவர்கள் வகுப்பறையில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது எப்படி, தாய், தந்தையரை மதித்து நடப்பது குறித்து நகைக்சுவையுடனும், உணர்ச்சி பொங்கவும் விளக்கி பேசினார்.

"மாணவர்களை ஒரு கண்ணாகவும், ஆசிரியர்களை ஒரு கண்ணாகவும் பார்த்தவர் டாக்டர் அப்துல் கலாம். அவர் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டிருக்கிறார். மாணவர்கள் தேர்வை கண்டு பயப்படக்கூடாது. அது ஏன் வருகிறது. பாடங்களை படிப்பதினால் தான் பயம் வருகிறது. படிக்காத மாணவனுக்கு தேர்வு பயம் வராது. எனவே, மாணவர்கள் படிக்க வேண்டாம். பாடங்களை பதிக்க வேண்டும் என்று அப்துல்கலாம் சொல்லி இருக்கிறார்.

பாடங்களை மூளையில் பதித்து விட்டால், நீங்கள் புத்தகமாக மாறி விடுவீர்கள். பிறகு உள் இருந்து எடுத்து காப்பி அடிக்கலாமே...! தன் மனதின் உள்ளே இருந்து காப்பி அடிக்கும் மாணவன் சாம்பியன் மாணவன். மாணவர்கள் சினிமா பற்றியும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசக்கூடாது. உங்கள் பெற்றோரை பற்றித் தான் பேச வேண்டும். ஆசிரியரை பற்றி பேசுங்கள். அவர்களை வெற்றி பெற வைக்க நன்றாக படியுங்கள்" என்று பேசினார்.

இடையிடையே அவர் மாடு கத்துவது போலவும், ஹெலிகாப்டர் பறப்பது போலவும் மிமிக்ரி செய்து கலகலப்பாக பேசி மாணவர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து கட்டுரைப் போட்டியில் "என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை" எனும் தலைப்பில் கடலூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இரா.ஹர்ஷினி முதல் பரிசு பெற்றார். இரண்டாம் பரிசு, யுவபாரதி மையப் பள்ளி மாணவி ஜெரிக்கா, மூன்றாம் பரிசு பிரிமியர் வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி மாணவி சி.திவ்ய ரிதன்யா பெற்றனர்.

"மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்" தலைப்பில் முதல் பரிசினை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி எஸ்.டி ஹரித்ரா, இரண்டாம் பரிசு சு.சிந்துஜா, இரா.செ.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் பரிசு பா.அனுஸ்ரீ, அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு வழங்கப்பட்டது.

"எனக்குப் பிடித்த கதை" தலைப்பில் முதல் பரிசு நா.சாலினிதேவி, நகரவை அரசு மேல்நிலைப்பள்ளி மேட்டுப்பாளையம், இரண்டாம் பரிசு ஸ்ரீபிரியா, அரசு மேல்நிலைப்பள்ளி செட்டிபாளையம், மூன்றாம் பரிசு எம். மல்லிகா தேவி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப்பள்ளி பேரூர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினர். கல்லூரி மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டிகளும் நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு, "எனது திரைப்பட அனுபவங்கள்" குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோவை சைபர் சிட்டி தலைவர் ஜி. அருள்மொழி, டாக்டர் கவிதாசன், ரோட்டரி கிளப் 3201 மாவட்ட இயக்குனர் மயில்சாமி, மாவட்ட பயிற்றுனர் மாதவ் சந்திரன், மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...