பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவி இன்று திறப்பு, மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி ஆறு மாதங்களுக்கு பின்பு இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, வால்பாறை, டாப்ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகள் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக பொள்ளாச்சி-வால்பாறை சாலை ஆழியாறு அருகே அமைந்துள்ள கவி அருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு ஜனவரி தொடக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. இதனால் இந்த ஜனவரி மாதம் 13-ம்தேதி அருவி மூடப்பட்டது.

கொரோனா மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக கவியருவி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறைந்ததை அடுத்து அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது.



இதனால் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த கவியருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று ஆழியாருக்கு சுற்றுலா வந்த ஏராளமான பொதுமக்கள் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...