கோவை லாலி ரோட்டில் காரில் அமர்ந்திருந்த நபர் சடலமாக மீட்பு - ஏசி கசிவால் உயிரிழப்பா? போலீசார் விசாரணை

காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.



கோவை: கோவை லாலி ரோட்டில் காரில் அமர்ந்திருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசி கசிவால் இறந்தாரா? உட்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மருதமலை சாலை, லாலி ரோடு அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்த போது ஒருவர் சீட்டில் அமர்ந்தபடி உயிரற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.



விசாரணையில் அவர், பி.என் புதுரை சேர்ந்த நசீர் அகமது (39) என்பது தெரியவந்தது. மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் மாலத்தீவிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால், அடிக்கடி வெளியே நசீர் அகமது சென்று வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

உயிரற்ற நிலையில் அவரை மீட்ட போது, காரில் ஏசி ஓடியவாறு இருந்ததால், ஏசி கசிவால் மூச்சுத்திணறி இறந்தாரா..? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...