திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் கோவையில் தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அரசை கண்டடித்து தொமுச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இன்று 6 திமுக உறுப்பினர்களான சண்முகம், கனிமொழி, என்வீஎன் சோமு, இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம், எம் எம் அப்துல்லா உட்பட 19 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.



இந்நிலையில் அதனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொமுச அமைப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களின் கோரிக்கைகளை கேட்டால் இடை நீக்கம் செய்வதா என்று கேள்வி எழுப்பி பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...