பொதுமக்கள் தொலைத்த மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் கோவையில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு..!

மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாகவும் திருடப்பட்டு விட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 60-லட்சம் மதிப்பிலான 106 செல்போன்கள் இன்று உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் பொது மக்களிடம் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட 106 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாகவும் திருடப்பட்டு விட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட 60-லட்சம் மதிப்பிலான 106 செல்போன்கள் இன்று உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் 106 தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்து உள்ளதாகவும், அதன் மதிப்புகள் 60 லட்சம் எனவும் கூறினார்.



மேலும் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 350-செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளதாக கூறிய அவர், மாதம் 100 செல்போன்களை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், போக்சோ வழக்குகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 149-வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், 60-வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் ஒன்பது வழக்குகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் கூறினார்.

குழந்தைகளுக்கான குற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். குற்ற பத்திரிக்கை மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்பதை ஆய்வு செய்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளிக்கூடம் ப்ராஜெக்ட் மூலம் 28-நாட்களாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் இதுவரை 36 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 10 வயது கீழ் உள்ள 12000 குழந்தைகளை சந்தித்து உள்ளதாகவும், தொடர்ந்து இந்த செயல் நடைபெறும் என்றும் இந்த ப்ராஜெக்ட் மூலம் இரண்டு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் மத்தியில் பான் மசாலா குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுக்கும்வகையில் 347 குற்றவாளிகளை கைது செய்து 332 வழக்குகள் பதிவு செய்து3 அரை டன் குட்கா பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.

பெட்டிக்கடைகளில் பான்மசாலா விற்பனை அதிகரிப்பதை தடுக்க 125 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து ஐந்து கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கஞ்சாவை பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 126 வழக்குகள் பதிவு செய்துள்ளோம் என்றும் 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15க்குள் இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவித்தார். வலி நிவாரணி மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மருத்துவர் சீட்டு இல்லாமல் யாருக்கும் வலி நிவாரணி மருந்துகளை மெடிக்கல்களில் விற்பனை செய்யக் கூடாது எனவும் தெரிவித்தார்.

கிரைம் வழக்குகளைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் 311 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் எனவும் மொத்தம் 1 கோடியே 51 லட்சத்து 8 ஆயிரத்து 380 மதிப்புள்ளவற்றை பறிமுதல் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் கேமராக்கள் உள்ளது. தொடர்ந்து கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

கோவிட்டுக்கு முன் இருந்ததை விட விபத்துக்கள் -10 % ஆக மாறியுள்ளது. 387 விபத்துகள் நடந்துள்ளதாகவும் கடந்த 5 ஆண்டில் இரண்டு விபத்துக்கு மேல் ஏற்படுத்தியவர்களைக் கண்காணித்து 714 வண்டிகளை அடையாளம் கண்டு 286 கனரக வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யபரிந்துரை செய்துள்ளோம் எனவும் கூறினார்.

அதேபோல் வாகன உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பல்வேறு இடங்களில் குறிப்பாக துடியலூர் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திருநங்கைகள் குறித்து பல்வேறு புகார்கள் வருவதாக தெரிவித்தார் அவர்களை அழைத்து ஆலோசனை வழங்கியதாகவும் அவர்களுக்கு சோசியல் வெல்பேர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அட்டுக்கல் பிரச்சனையை பொறுத்தவரை அங்குள்ள போராட்டக்காரர்களிடம் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தாசில்தார் மூலம் புகார் பெற்று  சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.





Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...