7-மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி..!

7-மாதங்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையிலிருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர்.


கோவை: இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது.

இதனால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான தண்ணீர் விழுந்து வருகிறது.

இதையடுத்து, இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 7-மாதங்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் காலையிலிருந்தே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டமாக அருவிக்கு வந்தனர்.

அவர்கள் அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக உற்சாக குளியல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் வருகையால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...