கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மகன் தற்கொலை செய்து 3 நாட்கள் ஆனது கூட தெரியாமல், வயது மூப்பு காரணமாக படுக்கையில் இருந்த தாயை பீளமேடு போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கோவை: கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ வள்ளி நகரை சேர்ந்தவர் வசந்தா (70). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது கணவர் இறந்து விட்டார்.
இவர்களது மகன் சிபி சுப்ரமணியம் (43). இவருக்கு திருமணமாகவில்லை. முதுமை காரணமாக தாயார் வசந்தாவை சிபி சுப்ரமணியம் தான் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் வசந்தாவினால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
இதனால் சிபி சுப்ரம்ணியம்தான் தாயாருக்கு பணிவிடை செய்து கடைகளில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் அப்பகுதி மக் கள் பீளமேடு போலீசாருக்கு போன் செய்து சிபி சுப்ரமணியம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று தகவல் கூறினார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதி விஏஓ ராஜேந்திரனுடன் வசந்தாவின் வீட்டிற்கு சென்றனர். வீட்டின் முன் பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது சிபி சுப்ரமணியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விஏஓ முன்னிலையில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
பின்னர் தூக்கில் தொங்கிய சிபி சுப்ரமணியத்தின் உடலை போலீசார் கீழே இறக்கினார்கள். அவர் இறந்து 3 நாட்கள் இருக்கலாம் என்பதால் இதனால் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டினுள் உள்ள அறையில் படுத்த படுக்கையாக இருந்த வசந்தா மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகை யில், "சிபி சுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல், தாயின் பென்சனை வைத்து இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். திருமணமாகாததால் சிபி சுப்ரமணியம் மனம் உடைந்து காணப்பட்டார் என்றும், வயது மூப்பு காரணமாக நடக்க முடியாத தாயாரை அவர் கவனித்து வந்ததாலும் விரக்தியாக காணப்படுவார் என்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். பெரும்பாலும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். வசந்தா வயது மூப்பு காரணமாக சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் மகன் உணவு கொடுத்தால் சாப்பிடுவார். எழுந்து நடமாட மாட்டார். இதனால் மகன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல் 3 நாட்களாக அவரது உடலுடன் இருந்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்கள். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மகன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல் அவரது உடலுடன் தாய் 3 நாட்கள் இருந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பீளமேடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.