கோவையில் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை…!

நிலத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் லஞ்சம் பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வேங்கை செல்வ பிரபு என்பவர் தனது நிலத்திற்கு DTCP தடையில்லா ஒப்புதல் சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்

நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு‌ போலீசாரிடம் செல்வபிரபு புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய பணம் 30 ஆயிரம்‌ பணத்தை பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம் செல்வ பிரபு வழங்கியுள்ளார்.

பின்னர் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக‌ அலுவலகத்திற்கு புகுந்து செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் ஆய்வாளர்கள் லதா மற்றும் பரிமளா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி பொறியாளர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...