கோவை அரசு பள்ளிக்கு தேவையான அறிவியல் கருவிகளை வாங்க உதவித்தொகை வழங்கிய தன்னார்வலர்கள்...!

ஒத்தகால்மண்டபம் அரசு பள்ளி அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகள் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில், அவற்றை வாங்க "கோவை ஆஸ்ட்ரோ கிளப்" என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவி தொகையை ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர்.


கோவை: கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில், ஒத்தகால்மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள், தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு தொலை நோக்கி உட்பட சிறப்பு கருவிகள், தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் தேவையை அறிந்த, "கோவை ஆஸ்ட்ரோ கிளப்" என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், மாணவர்கள் குறிப்பிட்ட கருவிகளை வாங்குவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் முன்னிலையில், அப்பள்ளி மாணவர்களிடம் வழங்கினர்.

மேலும், கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் 5 செயற்கை முப்பரிமான கருவியையும் (Virtual Reality) அப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.



இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பேராசிரியர் சக்திவேல், பள்ளி ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான தொகையினை வழங்கிய தன்னார்வலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...