14-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 65-வயது முதியவருக்கு 11 ஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம்

கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் - 65-வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65) என்ற முதியவரை கோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அனைத்து வாதங்களும் கேட்கப்பட்டு வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் ராமகிருஷ்ணனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு பெற்ற போலீசாரை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...