கோவை புத்தகத் திருவிழாவில் அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், இன்று அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கொடிசியா தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர்.

31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



இந்நிகழ்ச்சியில் LMSE அகாடமி சார்பில் 1700 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நேரடி அறிவியல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ராக்கெட் எவ்வாறு செயல்படுகிறது அதன் எடைக்கும், பறக்கின்ற வேகத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற அறிவியல் சம்பந்தமான பல்வேறு செயல்முறைகளை விளக்கமாக விவரித்தனர், மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு ஒரு அறிவியல் செயல் விளக்க கருவிகள் அடங்கிய பெட்டிகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் ஏ.வி. தொழில் குழுமத் தலைவர் டாக்டர் வரதராஜன், கோயமுத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...