தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், காலியாக உள்ள அரசு பணிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், அகவிலைப்படி, 21 மாத நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், மதிப்பூதியம், தொகுப்பு ஊதியம் முறையில் பணியாற்றும் சத்துணர்வு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்.ஆர்.பி செவிலியர், கிராமப்புற நூலகர், வருவாய் கிராம உதவியாளர் உட்பட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும், போராட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பிரச்சினைகளை களைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கத்துடன் கோஷங்களை எழுப்பியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்(பொறுப்பு) ஜெகநாதன் தலைமையில் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...