குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் நடவு தொடக்கம்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் மலர் கண்காட்சி நடைபெறும்.

இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து மலர்கள் நடப்படும் இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இங்கு பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.

இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,

விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடக்கிறது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...