கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் 'ஆடி அமாவாசை' வழிபாட்டுக்கு தடை..!

நொய்யல் ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வது வழக்கம். கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுப்பார்கள்.

கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் பக்தர்கள் தடையை மீறி திரண்டு திதி கொடுத்தனர்.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (28-ந் தேதி) வருகிறது. அன்று பக்தர்கள் ஏராளமானோர் பேரூர் நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்று முன்னோர்களை வழிபட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் ஆடி அமாவாசையில் பக்தர்கள் கூட தடை விதித்து கோவில் உதவி ஆணையாளர் விமலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. மேலும், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட அனுமதிக்க வேண்டாம் என பேரூர் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறை யினரும் கோவில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசை தினத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் புனித நீராடவோ, தர்ப்பணம் கொடுக்கவோ தடை விதிக்கப்படுவதாக உதவி ஆணையாளர் விமலா தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லாததால் இந்த ஆண்டிலாவது ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாம் என்று நினைத்து இருந்த பக்தர்கள் தடை காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...