பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 52 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று (26.07.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 52 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 11 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 7 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 6 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 12 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 6 மனுக்களும் ஆகமொத்தம் 52 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பிரதான அலுவலகத்தில் 19.07.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதாக்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் தெற்கு மண்டலம் 95 வது வார்டுக்குட்பட்ட போத்தனூரை சேர்ந்த அதீமுல்லா, வடக்கு மண்டலம் 55 வது வார்டுக்குட்பட்ட நியூ சிற்றம்பலம் லே அவுட் பகுதியை சேர்ந்த சகுந்தலா ஆகியோர்களது, சொத்துவரியில் பெயர் மற்றும் முகவரி மாற்றத்திற்கான மனுக்களின் மீது 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருத்த ஆணையினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு மண்டல உதவி ஆணையர்கள் சரவணன், அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துஇராமலிங்கம், சங்கர், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் இராமசாமி, செந்தில்பாஸ்கர், சுந்தாராஜ், கருப்பசாமி, ஹேமலதா, புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர்கள் விமலா, ஜெயலட்சுமி, கலாவதி, சத்யா, பாபு, உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.