கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை 2 கடைகளுக்கு சீல் 7 கடைகளுக்கு அபராதம்

பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குட்கா புகையிலை பொருட்களை அரசு தடை உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறையில் ரூ.10 ஆயிரமும் மற்றும் மூன்றாவது முறை பிடிபட்டால் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெட்டி கடை, மளிகை கடைகளில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 7 கடைகளில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...