இந்திய பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியின் முழுமையான வளர்ச்சிக்கான மத்திய ஜவுளி மற்றும் விவசாய அமைச்சர்களின் முயற்சிகளுக்கு இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது.
கோவை: இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலின் வளாச்சிக்கு இயந்திரமாக பருத்தி விளங்குகிறது. இது 6.5 மில்லியன் பருத்தி விவசாயிகள் உள்பட, 105 மில்லியன் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.
பல்வேறு தனித்துவமான நிவாரண நடவடிக்கைகள், இந்திய ஜவுளி இறக்குமதி நாடுகளுடனான வரியில்லா ஒப்பந்தம், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பின் பிந்தைய காலத்தில் எழுந்த ஜவுளிக்கான அதிக தேவை ஆகியவைகள் 2021-22ம் ஆண்டில் ஜவுளித் தொழில் அதன் செயல்திறனை அடைந்து சாதிக்க வழிவகை செய்தது. ஆனால், கடுமையான பருத்தி விலை உயா்வு, பருத்தி தட்டுப்பாடு காரணமாக தொழில்துறை சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. சீரற்ற வானிலை இஎஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய முறைகளின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக நமது நாட்டின் பருத்தி உற்பத்தி நடப்பாண்டில் 315 இலட்சம் பேல்களாக குறைந்துள்ளது.
பருத்தி உற்பத்தி, உற்பத்தித்திறன், தரம் மற்றும் இந்திய பருத்தியின் முத்திரையை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை உணர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சா் பியுஷ் கோயல், பருத்தித்துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த சுரேஷ் ஏ கோடக் தலைமையில் ஜவுளி ஆலோசனைக் குழுவை அமைத்து குறுகிய காலத்தில் இரண்டு கூட்டங்களை நடத்தினார்.
மேலும், பருத்தி சார்ந்த அனைத்து தரப்பினரின் கூட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஜுலை 24ம் தேதியன்று டெல்லியில் நடத்தி, அதில் மத்திய விவசாயத்துறை அமைச்சா், நரேந்திர சிங் தோமா, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சா் தாஷனா விக்ரம் ஜாதோஷ் ஆகியோரும் கலந்து கொண்டு, தற்போதைய சவால்களைத் தணிக்க மட்டுமன்றி, பிரதமரின் தொலைநோக்கு பாரவையான 5Fs (அதாவது விவசாய நிலத்திலிருந்து வெளிநாட்டிற்கு) என்ற இலக்கை அடைவதற்கு தேவையான பல்வேறு, குறுகிய மற்றும் நீண்டகால உத்திகள் பற்றி கலந்துரையாடல் நடத்தினார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் CITI தலைவர், த.ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (TEXPROCIL) தலைவர் மனோஷ்குமாமார் பட்டோடியா மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) தலைவர், ரவிசாம் ஆகியோர் இன்று கோவையில் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய ஜவுளித் துறை அமைச்சர், பியுஷ் கோயல் தொடர்ந்து எடுத்து வரும் அயராத முயற்சிகளை மிகவும் பாராட்டினர். பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த உலகளவில் சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும், அமைச்சர் கூறுகையில் பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினர்களின் நலனுக்காகவும், இந்திய பருத்தி மற்றும் ஜவுளி தயாரிப்புகளை பிராண்டிங் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் ஆலோசனையின்படி, ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினர்களும் ஒட்டு மொத்த ஜவுளித் தொழிலின் முழுமையான வளாச்சிக்கான பணியில் ஒன்றிணைவார்கள் என்று கூறியுள்ளார். விவசாய நிலம் முதல் தொழில் வரை பரிசோதனை வசதிகள் மற்றும் சுத்தமான மாசில்லாத பருத்தி உற்பத்தி ஆகியவை விரைவில் இந்திய பருத்தி மற்றும் அதன் ஜவுளி தயாரிப்புகளை மற்ற சாவதேச பருத்திக்கு இணையாக முத்திரை பதிக்க உதவும். உரம் மூட்டை கட்ட வண்ண HDPE பையை பயன்படுத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவானது,
இந்திய பருத்தியில் இருக்கும் தீராத பிரச்சினையான வெள்ளை HDPE மாசுபாட்டினை தீர்க்கும், ஏனெனில் விவசாயிகள் இந்த பைகளைத்தான் பருத்தி விதையை கையாளுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று CITI, TEXPROCIL மற்றும் SIMA தலைவர்கள் கூறினார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா ஓப்பந்தம் இந்தியா மேற்கொண்டுள்ளதால், அதன் மூலம் மிகப் பெரிய வாய்ப்புகள் உருவாகும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள டேச்சு வார்த்தைகள் மூலம் வாத்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.
மேலும், RoSCTL, RoDTEP, NTTM மற்றும் PM MITRA திட்டங்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளால், தரமான பருத்திக்கான தேவை மேலும் அதிகரிக்கும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர், பியுஷ் கோயல் மேற்கொண்டுள்ள முயற்சிகள் சாவதேச சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும் என்றும் தெரிவித்தனர்.
சரியான விதைகளைப் பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகள் ஆகியவற்றை பயன்படுத்துவது பருத்தி விவசாயிகளின் மகசூல் மற்றும் இலாப வரம்புகளை அதிகரிக்க உதவும் என்றும் அவாகள் பாராட்டியுள்ளனர்.
போலி விதைகளின் சட்டவிரோத விற்பனையைத் தடுத்து, இளம் விவசாயிகளுக்கு தீவிர பயிற்சியளித்து,உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதுடன், மரபணு ரீதியாக தூய்மையான சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதில் முன்னணயில் இருக்க அவர்களுக்கு கற்பித்தல் போன்ற உத்திகளை 2 தொழில்துறை வரவேற்றுள்ளது. CITI, TEXPROCIL மற்றும் SIMA தலைவர்கள் பருத்தி மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னணி வகிக்கும் தொழிற்துறையின் உத்தியை பாராட்டினர், மற்றும் அனைத்து உற்பத்திப் பிரிவுகளும் குறிப்பாக பருத்தியை பயன்படுத்துபவர்கள் பருத்தியின் வளர்ச்சியின் கூட்டு முயற்சிகளுக்கு நிதி மூலதனம் உருவாக்கத் தேவையான நிதியுதவியை வழங்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டனர்.
வரியில்லா ஒப்பந்தம், புதிய சந்தை வாய்ப்புகளை இந்தியா பெற விரும்பினால், அதற்கு தொழிற்துறை முன்னணயில் இருந்து செயல்பட வேண்டும் என்றும், ஏற்கனவே நாடு பருத்தி பற்றாகுறையை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது என்றும் கூறினார்கள்.
நாடு முழுவதும் அதிக அடர்த்தி விவசாயம் மற்றும் நுண் பாசனம் போன்ற, சில நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தியை அதிகரிக்க குறுகிய மற்றும் நீண்ட கால உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா், நரேந்திர சிங் தோமருக்கு CITI, TEXPROCIL மற்றும் SIMA தலைவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
மத்திய விவசாயம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சா்கள் மட்டத்தில் இது போன்ற முதல் கூட்டம் பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் மகத்தான ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர்கள் கூறினார்கள். பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கங்கள் மேற்கொண்ட பருத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டியதற்காக அமைச்சா்களுக்கு அவாகள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.