ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஏன் அந்த நிறுவனம் புகார் அளிக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் என இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 22-ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதில் ஈஷா யோகா மையத்தில் உள்ள கொன்றை பில்டிங் முதல் தளத்தில் கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என்றும், தான் அங்கு சென்ற பொழுது பிரேத விசாரணைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்று விட்டார்கள் எனவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இறந்த கொல்லு ரமணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தனியார் இடமான ஈஷா வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க வேண்டும் எனவும், ஈஷா மையத்தில் ஏன் யாரும் புகார் கொடுக்கவில்லை என விசாரிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், உடலை முதலில் பார்த்த நபர்கள் ஏன் காவல் துறையிடம் புகார் கொடுக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் தனியார் நிறுவனமான ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகள் ஏன் தற்கொலை குறித்து புகார் கொடுக்கவில்லை எனவும் விசாரிக்க வேண்டும் எனவும், இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த தற்கொலைக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் தொடர்பில்லை என காட்டுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும், அந்த இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகியும், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளருமான நேருதாஸ் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...