செஸ் ஒலிம்பியாட் போட்டி: 187-நாடுகளில் உள்ள 2000-வீரர்கள் பங்கேற்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..!

தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என முதலமைச்சர் 24-மணி நேரம் உழைத்து வருவதாகவும், இந்த ஒரு செஸ் விளையாட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், 187-நாடுகளில் இருந்து 2000-போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


கோவை: 44-வது ஒலிம்பியாட் போட்டி ஜோதி கோவை கொடிசியா வளாகம் வந்தடைந்ததும், இதனை கொடிசியா வளாகத்தில் தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துச்சாமி, மு.பெ சாமிநாதன், இராமச்சந்திரன், ஆகியோர் ஒலிம்பியாட் பலூன்களை பறக்க விட்டனர்.



மேளதாளம் முழங்க, பொய்க்கால் நடனம், கிராமிய நடனங்களுடன் விழா துவங்கியது.



44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் 4 மாவட்டங்கள் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு) அந்த ஜோதியை செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் அளித்தனர்.

இந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து கொடிசியா(Hall-D) அரங்கு வரை கொண்டு வரப்பட்டது. இதற்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கொடிசியா அரங்கிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.



கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் புரிந்த வீரர் வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-



தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என முதலமைச்சர் 24-மணி நேரம் உழைத்து வருகிறார். இந்த ஒரு செஸ் விளையாட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 187-நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கிறனர்.

இதுகுறித்து, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:-

மாமல்லபுரத்தில் செஸ் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டு போட்டியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஆர்வமும் வரவேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த முதல்வர் முன்னெடுத்து வருகிறார்.

187-நாடுகளில் உள்ள 2000-வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அனைத்து விளையாட்டு துறைகளிலும் நம் மாநிலம் நம் நாடு முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் பேசியதாவது:-

குறுகிய காலத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் செஸ் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

வரும் 28-ம் தேதி நடைபெறும் செஸ் போட்டிக்கான ஜோதி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையிலும் செஸ் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நமது தேசியமும் நமது மாநிலமும் செஸ் போட்டியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது.

தமிழக முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் இந்த போட்டியை கவனித்து வருகிறார். ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகமும் இதில் கவனம் வைத்துள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.



கொடிசியா வளாகத்தில் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 4450-மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உள்ளனர். கொடிசியா வளாகத்தில் மேற்கத்திய நடன நிகழ்ச்சி சிறுவர்கள் நடன நிகழ்ச்சி நடை பெற்றது.



அதிவிரைவு சதுரங்க போட்டி மாணவர்கள் பங்கு பெற்ற கிராண்ட் மாஸ்டர் சாம் சுந்தர் துவக்கி வைத்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...