தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை கண்டித்து கோவை பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணத்தை உயர்த்தி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குருசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...