கோவை பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்..!

பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 50-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒவரை கைது செய்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37) என்பதும் தெரியவந்தது.



பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...