அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி வாய்ப்பு: விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..!

விருப்பமுள்ள நபர்கள் உங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன் முதல்வர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை-18 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்ப வேண்டும்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18-பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதார பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என, 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

விருப்பமுள்ள நபர்கள் உங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன் முதல்வர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை-18 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...