வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு விருது ஜெயமோகன் வழங்கினார்

கொடிசியா கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா-22 -ல் வாழ்நாள் சாதனையாளர் விருதை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு, எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார்.


கோவை: கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம், கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியவை நடத்தும் 6-வது புத்தகத் திருவிழா கொடிசியா வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புத்தக திருவிழாவின் 2-ம் நாளான நேற்றுக்காலை 11 மணிக்கு வாசிப்பை ஊக்குவிப்போம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரி மாணவர்களுக்கான வினாடி, வினா போட்டிகள் நடந்தது. இதை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஒருங்கிணைத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் முன்னதாக கொடிசியா தலைவர் திருஞானம் வரவேற்று பேசினார்.



இதில் வரலாற்று ஆசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் வழங்கி, வாழ்த்தி பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இலக்கியகூடல் தலைவர் டி.பாலசுந்தரம், மரபின் மைந்தன் முத்தையா, புத்தக திருவிழா தலைவர் விஜய்ஆனந்த், கொடியா தலைவர் திருஞானம் சுப்பிரமணியம் உள்பட கொடிசியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ரூ. 1,50,000 ஆகியவை வழங்கப்பட்டது.



விழாவில் குடவாயில் பாலசுப்பிரமணியனை பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில் நவீன சிந்தாந்த்தம் என்பது வரலாற்று வாதத்துக்கு எதிரானது. வரலாற்று தன்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்நாள் சாதனையாளர் பெறும் குடவாயில் பாலசுப்பிரமணியன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். கோவில்களை பற்றி பலர் வரலாற்று புத்தகம் எழுதி இருப்பார்கள். ஆனால் குடவாயில் பாலசுப்பிரமணியன் நுண் வரலாற்றை எழுதியுள்ளார். அவர் தஞ்சை கோவிலின் கட்டுமானம் என்ற ஒரு புள்ளியிலிருந்து வரலாற்றை தொடங்குகிறார். அவர் சோழ வரலாற்றை பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் வரலாற்றை வென்று வரலாற்றை எழுதுவதறக்கு பதில் வாட்ஸ் ஆப்பை வென்று வரலாற்றை எழுதும் நிலையில் அவர் சோழர்கள் வரலாற்றை புத்தகமாக எழுதி இருக்கிறார்.இன்று சோழர்கள் காலம் இருண்ட காலம் என்ற வாதங்கள் நடக்கிறது. விரைவில் பொன்னியின் செல்வன் என்ற சினிமாப்படம் வெளி வர உள்ளது.

சோழர்கள் அதிக வரி வசூலித்தார்கள். குறு நில மன்னர்களை சிதறடித்தனர். அவர்கள் காலத்தில் சாதி மேலோங்கி இருந்தது என்ற மூன்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

அது உண்மை தான். ஆனால் இந்தியாவில் ஒரு வலுவான பேரரசை 300 ஆண்டு காலம் நிலை நிறுத்தியது அவர்கள் தான். அவர்கள் அதிக வரி வசூலித்தார்கள் என்றால் உலகிலேயே நிரந்தரமான ஒரு லட்சம் ராணுவ வீரர்களை கொண்டது சோழ பேரரசு தான். சிறிய மன்னர்களை வென்றால் தான் பேரரசை உருவாக்க முடியும். எந்திரங்கள் இல்லாத அந்த காலத்தில் நில அடிமைகள் இருந்தால் தான் உணவு உற்பத்தி இருக்க முடியும். சோழர்கள் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அவர்கள் வெட்டிய ஏரியினால் தான் நீர்பாசனம் மேலோங்கி உள்ளது. எனவே சோழர்கள் காலத்தை பொற்காலம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். அதைத் தொடர்ந்து வாழ்நாள் சானையாளர் விருது பெற்ற குடவாயில் சுப்பிரமணியன் எற்புரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....