மனைவி குரூப்-4 தேர்வு எழுத குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைத்த கணவர்

கோவையில் குருப்-4 தேர்வு எழுத மனைவியை அனுப்பி விட்டு, குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்து, அருகிலேயே இருந்து கவித்துவ கொண்ட கணவர்.


கோவை: தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர். அதில் சிலர் பாலூட்டும் கை குழந்தைகளுடன் தேர்வெழுத தாய்மார்கள் வந்திருந்தனர். நீலம்பூரில் உள்ள கே பி ஆர் கல்வி நிறுவனத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு தாய்மார்கள் தேர்வெழுத சென்ற நிலையில் தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர்.

அப்போது திருப்பதி என்பவர் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி குழந்தையை பார்த்துக்கொண்டார். கே பி ஆர் கல்வி நிலையத்தில் உள்ள வளாகத்தில் மரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை கவனித்துக்கொண்டார். திருப்பதியின் மனைவி மகேஷ்வரி வரும் வரை திருப்பதி கை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டது அங்கு வந்திருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



இதே போன்று சிறு குழந்தைகளுடன் ஏராளமானோர் தேர்வெழுத வந்த நிலையில் குழந்தைகளின் தந்தையார்கள் குழந்தைகளை கனிவுடன் பார்த்துக்கொண்டனர். இது அங்கு வந்திருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...