திருப்பூர் அருகே ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது -5 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, 5-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ரயிலில் திருப்பூருக்குக் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் வாலிபர் ஒருவர் திருப்பூருக்கு கஞ்சா கடத்துவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கோவை ரயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீசார் ராஜலிங்கம், சையது மொகமது, கோபால், சுரேஷ், சுஜித் உள்ளிட்டோர் நேற்று காலை ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தன்பாத்-ஆலப்புழா ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெட்டியில் ஒரு பையுடன் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலம் பர்கார்த் பகுதியை சேர்ந்த சதானந்தா படேய் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...