நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ கோ‌வை மேயர்‌ தலைமையில்‌ 'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது..!

தெற்கு மற்றும்‌ மத்திய மண்டல பகுதிகளில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ மூலம்‌ தூய்மைப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மற்றும்‌ மஞ்சள்‌ பைகளை வழங்கினார்‌.


கோ‌வை: கோ‌வை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ எனது குப்பை எனது பொறுப்பு என்ற தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தெற்கு மற்றும்‌ மத்திய மண்டல பகுதிகளில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ மூலம்‌ தூய்மைப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மற்றும்‌ மஞ்சள்‌ பைகளை வழங்கினார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.29க்குட்பட்ட கணபதி, டெக்ஸ்டூல்‌ பாலம்‌ சிக்னல்‌ அருகில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ எனது குப்பை எனது பொறுப்பு என்ற தூய்மை உறுதிமொழி ஏற்ற பின்னர்‌, பொதுமக்களுக்கு மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்குவது குறித்து “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வாசகங்கள்‌ அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம்‌ மற்றும்‌ மஞ்சப்பைகளை வழங்கியதைத்‌ தொடர்ந்து, அப்பகுதியில்‌ உள்ள கழிவு மண்ணை அகற்றும்‌ பணியினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்‌.



அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ பாரதிபுரம்‌, அம்மன்குளம்‌, புலியகுளம்‌ ஆகிய பகுதிகளில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ பெரிய கழிவுநீர்‌ கால்வாய்‌ தூர்வாரும்‌ பணியினை துவக்கி வைத்த மேயர்‌ தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளக்கரை பகுதியில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்களின்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ மூலம்‌ சிறப்பு தூய்மை பணியினை துவக்கி வைத்து, பார்வையிட்ட பின்னர்‌, தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கினார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌ புட்டுவிக்கி சாலையில்‌ உள்ள இராஜவாய்க்கால்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, வாய்க்காலில்‌ உள்ள குப்பைகள்‌, செடி, கொடிகளை உடனடியாக தூர்வாரி கால்வாயில்‌ நீர்‌ சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இந்நிகழ்ச்சியின்போது துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள்‌ தனலட்சுமி(தெற்கு), வே.கதிர்வேல்‌(வடக்கு), ஆளுங்கட்சித்தலைவர்‌கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அஸ்லாம்பாஷா, குணசேகரன்‌, சரளா, ரெங்கநாயகி, சரண்யா, முனியம்மாள்‌, உதவி ஆணையர்கள்‌, அண்ணாதுரை, சங்கர்‌, மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்கள்‌

கருப்புசாமி, புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ இராதாகிருஷ்ணன்‌, இராமு, சுகாதார ஆய்வாளர்‌ ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...