வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் காவல்துறை

திருப்பூர் வேலம்பாளையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் நடைபெற்ற பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர், அதனையடுத்து மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தீவிர படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும்,அந்தந்த பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பின்லாடை நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...