கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கோவையை சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது கல்லூரி மாணவி ஒருவர், கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக, கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த ஒருவர் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக, கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் ராஜ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது கல்லூரி மாணவி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்.நிலையத்தில், பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார்

அதில், தான் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருவதாகவும், கடந்த 2020-ல் சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த போது, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ராஜ்குமார் தனக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதை

மறைத்து, இந்த பெண்ணிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை திருமணம் செய்த விருப்பம் இல்லாததால் அந்த பெண் மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த ஆபாச படத்தை காட்டி, அவர் சொல்லும் இடத்திற்கு வரும்படி மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததால், அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனால், பயந்து போன அந்த பெண் சென்னையில் ராஜ்குமார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ராஜ்குமார் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குன்றத்தூரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அங்கும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமாரின் வீடு கோவையில் இருப்பதை அறிந்த அந்த பெண், அந்த படங்களை பெற்றுக்கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளார். அப்போது, தன்னை ராஜ்குமார் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அருகே வர சொல்லியதாகவும், அங்கு சென்று புகைப்படங்களை கேட்ட போது, தர மறுத்த ராஜ்குமார் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக, புகார் மனுவில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...