மத்திய மண்டலத்தில் தூய்மை மற்றும்‌ சுகாதாரபணிகள்‌ கோவை மேயர் நேரில் ஆய்வு

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63க்குட்பட்ட இராமநாதபுரம்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பள்ளி வளாகத்திலுள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்திடவும்‌, பழுதடைந்த கட்டடங்களை பராமரிக்க வேண்டுமெனவும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டல பகுதிகளில்‌ தூய்மை மற்றும்‌ சுகாதாரபணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63க்குட்பட்ட இராமநாதபுரம்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பள்ளி வளாகத்திலுள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்திடவும்‌, பழுதடைந்த கட்டடங்களை பராமரிக்க வேண்டுமெனவும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்,



பின்னர்‌, இராமநாதபுரம்‌, பெருமாள்‌ கோயில்‌ பிரதான வீதியில்‌ உள்ள அரசு இடத்தில்‌ தனியார்‌ கால்நடைகளை வளா்ப்பதையும்‌, குப்பைகள்‌ கொட்டியிருப்பதையும்‌ பார்வையிட்டு கால்நடை வளர்ப்பவர்களுக்கு உரிய நோட்டீஸ்‌ வழங்கவும்‌,



அப்பகுதியிலுள்ள குப்பைகளை உடனடியாக சுத்தம்‌ செய்திட சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடர்ந்து, இராமலிங்க ஜோதி நகரில்‌ உள்ள மழைநீர் வடிகாலில்‌ செடி, கொடிகள்‌ மற்றும்‌ குப்பைகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத்‌ தொடாந்து,



அப்பகுதியிலுள்ள மாநகராட்சி இடத்தில்‌ தனியார்‌ வாகனங்கள்‌ நிறுத்தப்பட்டிருந்ததால்‌, தனியார்‌ வாகனங்கள்‌ நிறுத்தாதவாறு இடத்தை புனரமைத்து, மேம்படுத்தி அப்பகுதியில்‌ மாநகராட்சி விளையாட்டு மைதானம்‌ அமைத்திட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்,



மேலும்‌, பெருமாள்‌ கோயில்‌ வீதியில் உள்ள நியாயவிலைக்கடையில்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களின்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, உதவி ஆணையாளர்‌ சங்கா, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி பொறியாளர்‌ கணேசன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலாகள்‌ பலர் உடனிருந்தனர்‌.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...