அதிமுக அலுவலகத்தின் சாவியை EPS-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - திருப்பூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் செல்லும் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக வருவாய்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகம் சீல் வைத்து அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.



இதை கொண்டாடும் வகையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...