அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்த வசதி இல்லாத வணிக வளாகங்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று புதிய திட்ட சாலையில் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளன. மேலும் இது பொள்ளாச்சி பல்லடம் சாலையில் இணைப்பு சாலையாகவும் உள்ளது.
இதனால் இங்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பது வழக்கம். இந்நிலையில் சாலையின், இருபுறங்களிலும் நோ பார்க்கிங் பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.

இதனால், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து காவலர்கள் அவ்வப்போது அத்துமீறும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வந்த போதிலும், இது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த உரிய இட வசதிகள் ஏற்படுத்தாததால், இது போன்ற நெருக்கடி ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நகரில் அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்த வசதி இல்லாத வணிக வளாகங்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.