கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் 4-வது விபத்து - தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம்..!

அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை - திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் ஒருவர் பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பாலத்தின் வளைவுகளில் சாலையில் ஒரு பகுதியில் அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்இன்று கோவை அரசு மருத்துவமனையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றன.அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றது. அப்போது அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும்கவனிக்கவில்லை என்று தெரிகிறது.



திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துக்கள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...