கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்..!

அரசு அறிவித்துள்ள மின்‌ கட்டண உயர்வு கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-

கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாகவே கூலி உயர்வு இல்லாமல்‌, விசைத்தறியாளர்கள்‌ வாழ்வாதாரமே இல்லாமல்‌ பெறும்‌ போராட்டம்‌ நடத்தியும்‌, அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள்‌ நடத்தியும்‌, அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலி உயர்வே இன்னும்‌ முழுமையாக அமல்படுத்தாத சூழ்நிலையில்‌ கடந்த 6 மாதங்களாக நூல்விலை ஏற்றத்தினாலும்‌, இரண்டு மாதமாகத் தொழில்‌ முழுமையாக முடங்கிய நிலையில்‌ அரசு அறிவித்துள்ள மின்‌ கட்டண உயர்வு கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவும்‌, பேரிடியாகவும்‌ உள்ளது. விசைத்தறி தொழில்‌ உள்ள இன்றைய சூழ்நிலையில்‌ மின்‌ கட்டணமே கட்ட முடியாத நிலையில்‌ உள்ளோம்‌.

குறைந்த பட்ச கூலி உயர்வு பெற்றபோதும்‌ தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு விலைவாசி உயர்வு, போன்ற காரணத்தாலும்‌ தற்போது உயர்த்தியுள்ள யூனிட்க்கு 0.70 பைசா என்பது இதுவரை இல்லாத உயர்வாகும்‌.

கூலி விசைத்தறியாளர்கள்‌ குடும்ப வாழ்வாதாரத்தையும்‌, குடும்பமே உழைக்கும்‌ சூழ்நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டுதான்‌ கடந்த காலங்களில்‌ அரசு விசைத்தறியாளர்களுக்கு என்ற தனியாக சிலாப்‌ சிஷ்டத்துடன்‌ 111A2 என தனியாக டேரிப்‌ பிரித்து சலுகை வழங்கி வந்துள்ளது.

அதனால்‌ எங்கள்‌ தொழில்‌, மற்றும்‌ குடும்ப வாழ்வாதார சூழ்நிலையை கவனத்தில்‌ கொண்டு விசைத்தறியாளர்களுக்கு உயர்த்திய மின்‌ கட்டண உயர்வை எந்தவகையிலும்‌ கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்கள்‌ ஈடு செய்ய முடியாத கட்ட முடியாத மின்‌ கட்டண உயர்வை அரசு 111A2 க்கு முழுமையாக விலக்கு அளித்து பல லட்சம்‌ கூலி விசைத்தறியாளர்கள்‌ குடும்ப வாழ்வாரதத்தையும்‌ விசைத்தறி தொழிலையும்‌ தொழிலாளர்களையும்‌ பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறுகோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...