கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்கப்படும்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

கோவை விமான நிலையத்தில்‌ செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, கோவை அரசு மருத்துவமனையில்‌ குரங்கு அம்மை சிகிச்சைக்கென ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்‌.



கோவை: ஐசிஎம்ஆர் மூலம் 15 ஆய்வகங்கள் குரங்கு அம்மையை கண்டறிய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஒன்றை தமிழகத்திற்கு கேட்டுள்ளோம், அது வந்தவுடன் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில் தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை தாக்கம் உள்ள 63 வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தீவரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்நோய் குறித்து கோவை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது, இங்கு வெளிநாட்டில் இருந்து இரு விமானங்கள வருகின்றது. தினமும் 170 பயணிகள் வரை வெளிநாடுளில் இருந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக சோதனை நடத்தப்படுகின்றது. இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா, குரங்கு அம்மை கண்டறியப்பட வில்லை, விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் இருப்பதாகவும். ஒரு படுக்கை அறையும் தயாராக இருக்கிறது, கோவை, மதுரை, திருச்சி சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட துவங்கும், ஐசிஎம்ஆர் மூலம் 15 ஆய்வகங்கள் குரங்கு அம்மை கண்டறிய ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது, இதில் ஒன்றை தமிழகத்திற்கு கேட்டுள்ளதாகவும், அது வந்தவுடன் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும், கேரளா, தமிழகம் இடையே 13 பாதைகளில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் பொதுசுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், குரங்கு அம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார், முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களும் கண்காணிக்கபடுகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி இருக்கின்றது. அதனால் முக்கவசம், சானிட்டைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தி இருப்பதாகவும், முதல்தவணை தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாவது தவணை 86 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசிகளும் போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன, வரும் ஞாயிற்று கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.



ஆயுஷ்மான் பாரத் பணிகளில் தொய்வு என ஒன்றிய நிதி் இணை அமைச்சர் சொல்லி இருப்பதில் தெளிவில்லை. எனவும் இது குறித்து எதில் சரி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினால் அதை சரி செய்ய தயார் எனவும் துறை சார்ந்தவர்கள் பாராட்டி இருக்கும் நிலையில் அவர் தெரியாமல் சொல்லி இருப்பார்.

மக்களின் வீடுகளுக்கே தேடி சென்று மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும். கடைகோடி மனிதனுக்கும் தமிழகத்தில் சிகிச்சைகள் கிடைப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியில் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....