தமிழ்நாடு திருநாள்- கோவையில் முதல்வரின் காணொளி மின்னணு வாகனத்தில் ஒளிபரப்பு..!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் முதல்வரின் காணொளி நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு நில அளவைத் துறை சார்பில் இன்று ஒரு நாள் கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் இன்று தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு நில அளவைத் துறை சார்பில் இன்று ஒரு நாள் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட தமிழ்நாடு திருநாள் நிகழ்ச்சியினை கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் ஒளிபரப்பு செய்தது.



கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் முதல்வரின் காணொளி நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.



இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதனையடுத்து இன்று கோவை மாநகர் பகுதிகளில் சில இடங்களில் முதல்வரின் காணொளியை ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...