கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் கால் துண்டிப்பு.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ் (52). இவர் இன்று கோவை இரயில் நிலையத்தில் ஒன்றாம் பிளாட்பாரத்தில் ரயில் எஞ்சின் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரது கால் துண்டானது. ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (52). இவர் இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாம் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சக பயணிகள் அவரை தடுக்க முயன்றும், இரயில் முன் பாய்ந்த மகேஷ், ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த ரயில் லோகோ பைலெட் ரயிலை உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள், ரயில்வே போலீசார் ரயிலின் அடியே சிக்கிய மகேஷை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இடது கால் துண்டான நிலையில் மீட்கப்பட்ட மகேஷ்,108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசரம் கருதி, 108 ஆம்புலன்ஸ் ரெயில்வே பிளாட்பாரம் வரை வந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...