கோவையில் மது குடிக்க பணம் தராததால் கத்தி குத்து - தப்பிய நபருக்கு போலீஸ் வலை..!

ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வம் (34). பெயிண்டர். இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் வந்தார். அப்போது அதே பேருந்தில் ஏற்கனவே பழக்கமாக மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் அதே பேருந்தில் வந்துள்ளார்.

அப்போது மணிகண்டன், செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பேருந்துராமநாதபுரம் சிந்தாமணி பேருந்து நிறுத்தம் வந்ததும், செல்வம் பேருந்தைவிட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போதும் அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...