பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பவானி ஆற்றில் 14-ஆயிரம் அடி நீர் திறப்பு..!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.


கோவை: நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மொத்த கொள்ளளவான 100 அடியில் நேற்று காலை 81 அடி நீர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு 97 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டோடுகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் 5 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...