கோவையில் நடைபெற்ற பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் தேரோட்டம்.

கோவை விலாங்குறிச்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில், தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் திருத்தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாடுகள், குதிரைகள் நடனமாடி, திருத்தேர் விழாவில் அணிவகுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



கோவை விலாங்குறிச்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் காவல் தெய்வமாக திகழும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும்.



அதேபோல, இந்த ஆண்டு ஐந்தாம் வருடாபிஷேக விழா மற்றும் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பகவதீஸ்வரி சமேத ஸ்ரீ பகவீதிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்த படி உலா வந்த தேரை, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.



தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறை சாற்றும் விதமாக சிவ வாத்தியம், ஜமாப் இசை முழுங்க, மாடுகள், குதிரைகள் நடனமாடியபடி அணிவகுத்து சென்றதை அனைவரும் கண்டு ரசித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...