ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தகவல்


ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சந்தோஷமாக வீடு திரும்பியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்டுள்ளார் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 

பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச்செய்ததும், இந்தியாவெங்கும் திருக்குறளின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ந்ததும் மத்திய அரசு நடவடிக்கைதான் என கூறினார். 

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மாணவர்களையே சாரும் எனவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியம் அல்ல அது இந்தியாவின் பாரம்பரியம் எனவும் தேசிய விழாவாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் போராட்டத்தின் போது சில தீய சக்திகள் மற்றும் இடதுசாரிகள் இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதாகவும், அதையும் தாண்டி மாணவர்களின் ஒற்றுமையால்தான் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக கூறினார். 

காந்திய வழியில் ஈடுபட்ட மாணவர்கள் தேசியகீதம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வருந்தத்தக்கதாகவும், மாணவர்கள் நமது குடும்பத்தில் ஒருவர், அவர்கள் பிரச்சனையின் போது நான் அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அமர்ந்திருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் குறித்து அரசியல்வாதிகள் பொதுமக்களிடம் தெளிவாக தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்ப முயன்றவர்களை உடனே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...