மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கையில் இருந்த 2 சவரன் தங்க நகை காணாமல் போயுள்ளதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீர்கான் (24) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், இன்று (வியாழன்) சமீர்கான் காந்திபுரம் வடகோவை மேம்பாலத்தின் அருகே நடந்துகொண்டிருந்த போது அவரை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்துள்ளனர். இதையறிந்த அவர் தப்பியோட முயன்று மேம்பாலத்தின் மேல் இருந்து குதித்துள்ளார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரை பிடித்த காவல் துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



பின் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் என்பவரது மகன் சமீர்கான் என்பதும், கேரளாவில் ஒரு உணவு விடுதியில் பணியாற்றி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவை வந்தது தெரியவந்துள்ளது.



Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...