5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு  மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஓன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பெருமாள் மற்றும் சீனிவாசன் என்பவர்களை மற்றொரு குழுவை சேர்ந்த நாகேந்திரன், வீரன், விஜி, மணி, சந்தோஷ்,ராஜன்,செந்தில் ஆகிய ஏழு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள் பெருமாளையும் சீனிவாசனையும் கத்தியால் குத்தியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.சீனிவாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வழக்கில் 7 பேரையும் துடியலூர் போலிசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கோவை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செந்தில், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதிபதி கார்த்திகேயன், மற்ற 5 பேரான நகேந்திரன்,விஜி,வீரன்,ராஜன், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டார்.கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...