ரேஷன் அரிசி கடத்த முயற்சி- விசாரணை


தமிழக அரசின் சார்பில் மலிவு விலையில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசிகள் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது வழக்கம். அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ராமபட்டினம் சோதனை சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரியை பிடித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து லாரியில் சோதனையிட்டபோது அதில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

லாரியை கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...