கோவையில் பண்டிகை காலங்களில் ஜேப்படி திருட்டு; 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் கைது

கோவை: மகளிர் சுய உதவி குழு தலைவி பண்டிகை காலங்களில் ஜேப்படி கொள்ளையராக நகரங்களில் வலம் வந்து கொள்ளையடித்து வந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) தனிப்படை போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: மகளிர் சுய உதவி குழு தலைவி பண்டிகை காலங்களில் ஜேப்படி கொள்ளையராக நகரங்களில் வலம் வந்து கொள்ளையடித்து வந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) தனிப்படை போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா தேவி(32). இவர் அப்பகுதியில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். அதோடு தீபாவளி பொங்கல் புத்தாண்டு காலங்களில் பெண்கள் கடைவீதிகளில் குவியும் போது அதை பயன்படுத்தி நகை, பணம் ஜேப்படி செய்தும் வந்துள்ளார்.

இவர் மீது சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கோவை மாநகர போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பதற்காக இவர் ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து தீபாவளி திருட்டுகளை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் உமா, கார்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று மாலை ஆர்.எஸ் புரம், பூ மார்க்கெட் பகுதியில் நோட்டமிட்டனர். அப்போது ராஜாமணி என்ற பெண்ணிடம் கைப்பையிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணம் திருடும் போது அனிதா தேவியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரை ஆர்.எஸ் புரம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அனிதா தேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-

நான் வழக்கமான நாட்களில் மகளிர் குழு தலைவியாக இருப்பேன். பண்டிகை காலங்களில் நகை-பணம் ஜேப்படி செய்யும் நடவடிக்கையில் இறங்கி விடுவேன். பணம் சிக்கினால் நானே வைத்துக்கொள்வேன். நகை சிக்கினால் எனது கணவரிடம் கொடுத்து விடுவேன்.

அவர் அடகு கடையில் நகை விற்பனை செய்து பணமாக மாற்றி என்னிடம் கொடுத்து விடுவார். கடந்த 5 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறேன். என் மீது மகளிர் குழுவினருக்கும், போலீசாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் காரமடையில் ஆடம்பரமாக வீடு எடுத்து தங்கி உள்ளேன்.

கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடமிருந்து நகை பணத்தை எளிதாக திருடி விடுவேன். குறிப்பாக கைக்குழந்தையுடன் ஷாப்பிங் வரும் பெண்களை எளிதாக மடக்கிவிடலாம். எனது நடவடிக்கையில் சந்தேகம் வராத அளவுக்கு மிகவும் மாடனாக உடை அணிந்து கொள்வேன்.

என்று அனிதா தேவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...